தொட்டு சுகமாக்குமையா இயேசுவே - Thottu sugamaakkum aiyya yesuve

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே

நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

மாறுமே எல்லாம் மாறுமே - 2

எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை

உம் பாசக் கைகள் எட்டி இன்று தொடணுமே - 2

கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்

கர்த்தா எந்தன் கதறல் கேளும் - 2

தொடணுமே என்னை தொடணுமே - 2

கடனும் உடனும் என்னை முடக்க முடியாதே

கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார் - 2

கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்

கடனை எல்லாம் மாறச் செய்வார் - 2

மாறுமே எல்லாம் மாறுமே - 2

குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்

நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால் - 2

இல்லை என்பது எனக்கு இல்லை

தொல்லை என்பது துளியும் இல்லை

இல்லையே தொல்லை இல்லையே - 2

தொட்டு சுகமாக்குமையா இயேசுவே

நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

நீர் தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே

தொடணுமே என்னை தொடணுமே

தொடணுமே என்னை தொடணுமே